top_banner
29.10.2009
28.10.2009
27.10.2009
26.10.2009
25.10.2009
24.10.2009

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர்களினால் நடத்தப்படும் பாரதி பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
பொத்துவில் முதல் கல்முனை வரையுள்ள கழகங்களில் .இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் ஏழு அணிகளாக வகுக்கப்பட்டு 10 ஓவர் கொண்ட போட்டிகளாக அமைச்சர் கருணா அம்மானின் 34 ஆவது பிறந்த நாளில் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டிகள் மிகவும் சிறப்பாக தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடை பெற்று வருகின்றது.

         இறுதிப்போட்டியினை இம் மாத இறுதிப்பகுதியில் திருக்கோவில் உதய சூரியன் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி  பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பாண்டிருப்பு யங்ரோவர்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அண்மையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் கிறிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றை நடத்தியது. இதில், இறுதிப் போட்டியில் கல்முனை விளையாட்டுக் கழகமும் துளிர் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டது. இதில், 5 ஓட்டங்களால் கல்முனை விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக ச. அஜந்தன் (யங்ரோவர்ஸ்) தெரிவு செய்யப்பட்டார். இச்சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் போது வெற்றி பெற்ற கழகங்கத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் பீ. கீதன் வழங்கி வைத்ததுடன் 2008ஆம் ஆண்டுக்கான கழகத்தின் சிறந்த தலைவருக்கான விருதினை யங்ரோவர்ஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் எஸ். சதீஸ்குமாருக்கும் (சசி), அணியின் சிறந்த தலைவராக கே. தட்ஷானந்துக்கும் (கபில்) விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.
pan
news
heading3
All copyrights reserved ® www.parathi.com © 2009