நாட்டில் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழி பிறந்துள்ளதையொட்டி இலங்கை மத்திய வங்கி, ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத் தாள் ஒன்றினை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட கப்ரால் புதிய நாணயத்தாளினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ம் ஆண்டின் 6ம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புகழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. தாளினது முன்பக்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் சுபீட்சத்தினை நோக்கி முன்னேறிச் செல்கின்ற இணக்கம்மிக்க ஒரு நாடு என்ற தொனிப்பொருளும் தாளின் வலது பக்கத்தில் ஜனாதிபதியின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது.
