தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ரெலோ உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதியை சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் (
மேலும் )
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10
வவுனியாவில் உள்ள தடுத்து முகாம்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல், சுதந்திர நடமாட்டத்திற்காக திறந்து விடப்படும் என அரசாங்கத்தின் சார்பில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இதனை சற்று முன்னர் வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் வைத்து அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் முட்கம்பிகள் தகர்க்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வரலாம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கஇ இன்று பசில் ராஜபக்ச வரலாற்று ரீதியான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தமைக்கு அமையவே இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சுங்கப் பிரிவு கப்பலான ஓசனிக் வைக்கிங்கில் இருந்து இந்தோனேசியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் உள்ளடங்கியிருக்கும் 10 இலங்கைப் பெண்களும் அவர்களின் பிள்ளைகளும் தடுப்பு முகாமிலிருந்து எங்கேயும் செல்ல முடியாதவாறு தாங்கள் ட்டிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
தமது விருப்பத்தின் பிரகாரம் தாங்கள் எங்கும் வெளியே செல்ல முடியாதெனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு மாறாகத் தாங்கள் (
மேலும் )
கல்முனை ஆதார வைத்திய சாலையில் பல வருடங்களாக எதுவித கொடுப்பனுவும் இன்றி தொண்டர்களாக சேவை செய்த தமிழ் இளைஞர் யுவதிகள் நிரந்தர நியமனம் கோரி கடந்த ஐந்து நாட்களாக அடையாள கவனயிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (
மேலும் )
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு. இனியபாரதிக்கு காரைதீவில் பெருவரவேற்பளிக்கப்பட்டது. அங்கு இனியபாரதிமற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சீ.செல்வராசா உள்ளிட்டோர் மாலைசூட்டி ஊர்வலமாக நாதஸ்வரம் மேளம் பாண்டு வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர்வீ.கிருஸ்ணமூர்த்தி பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராஜா இணைப்பாளர் ஆகியோர் உடன்வருவதையும் இணைப்பாளர் கு.இனியபாரதிக்கு தவிசாளர் ந.ஜீவராஜா பொன்னாடை போர்த்துவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம். (
மேலும் )
நாவிதன்வெளி பிரதேசத்தில் பத்தாம் திகதி மினி சூறாவெளி வீசியதில் சில வீடுகள் சேதம் அடைந்த்தன . சேதம் அடைத்த வீடுகளையும் அதனை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி பார்வையிடுவதையும் காணலாம். (
மேலும் )
திருக்கோவில் பிரதேச மக்களினால் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு அவரின் சேவைகளைப் பாராட்டும் முகமாக மகத்தான வரவேற்பு நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்ற போது இடம் பெற்ற காட்சி ஒன்றைக் காணலாம். (
மேலும் )
நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவில் விதாதா வள நிலையம் திறந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் திஸ்ஸ விதாரண ,ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி , நாவிதன் வெளி பிரதேச செயலாளர் எம் . கோபலரெத்னம் ஆகியோர் வரவேற்க்கப் படுவதையும் ஏனைய காட்டிசிகளையும் காணலாம். (
மேலும் )